Breaking News

ஊரடங்கு உத்தரவு தொடர்பான அறிவிப்பு

 


கொழும்பில் இன்றைய தினம் நண்பகல் 12 மணி முதல் நாளை அதிகாலை ஐந்து மணி வரையில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


நாட்டில் நிலவும் நிலைமையை கருத்தில் கொண்டு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


இது தொடர்பான அறிவிப்பை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 


இதேவேளை நேற்று பிற்பகல் 1 மணி அளவில் மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன், நேற்று இரவு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்திருந்தது.


இந்த நிலையில் நேற்று பிறப்பிக்கப்பட்ட நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு உத்தரவு இன்று அதிகாலை ஐந்து மணிக்கு தளர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments