Breaking News

உடனடியாக பதவி விலகுங்கள் - பதில் ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை



நாட்டிலிருந்து தப்பிச்சென்ற இழிவான அதிபரால், ரணில் விக்ரமசிங்க பதில் அதிபராக நியமிக்கப்பட்ட நிலையில் அவர் உடனடியாக பதவி விலக வேண்டுமென பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில்,

சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி பதில் அதிபரான ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக பதவி விலக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதில் முதலாவதாக கோரப்பட்டுள்ளது.

மக்கள் ஆணையற்ற அரசாங்கத்திற்கு நற்பெயரை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனடியாக பதவி விலகுவது குறித்து சிந்திக்குமாறும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் அறிக்கை மூலம் பதில் அதிபரிடம்வலியுறுத்தியுள்ளது.

No comments