Breaking News

தற்போதைய நெருக்கடிக்கு மகிந்தவே முழு பொறுப்பு! - குமார வெல்கம


. 

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைக்கு பிரதமர் மகுீந்த ராஜபக்ஷவே காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குற்றம் சுமத்தியுள்ளார். நாடாமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

2019ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சாபத்தை தற்போதைய அரசாங்கம் எதிர்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

2019ம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்சவின் பெயர் முன்மொழியப்பட்ட போது ‘கோட்டாபய வீட்டுக்குச் செல்லுங்கள்’ என்ற கோஷத்தை முன்வைத்த முதல் நபர் தாம் என்றும் அவர் கூறினார்.


எந்த அரசியல் அனுபவமும் இல்லாத கோட்டாபய ராஜபக்சவின் வேட்புமனுவை தாம் எதிர்த்ததாகவும், ஆனால் அப்போது யாரும் தம் பேச்சைக் கேட்கவில்லை என்றும் வெல்கம கூறினார்.


“பிரதமர் மகிந்த ராஜபக்ஷ எனது கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை, ஏனெனில் அவர் குடும்ப உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும்” என்பதில் உறுதியாக இருந்தார் என்று வெல்கம கூறினார்.

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு எதிராக குரல் கொடுத்ததற்காக நான் தனிமைப்படுத்தப்பட்டேன்," என்று அவர் கூறினார்.

இந்நிலையில், தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்குமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

No comments