Breaking News

ஆசியாவிலேயே அதிக பணவீக்கம் கொண்ட நாடாக இலங்கை பதிவு!



இலங்கையில் தற்போது பணவீக்கம் 16.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேவேளை, ஆசியாவிலேயே அதிக பணவீக்க வீதத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளது.

மேலும், பணவீக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பு என வரையறுக்கப்படுகிறது. இது ஒரு நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதற்கான ஒரு குறிகாட்டியாகவும் உள்ளது.


இலங்கையில் 2021 முதல் 2022 வரை பணவீக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. அதன்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021 ரிசம்பரில் இலங்கையின் பணவீக்கம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.


2021 ஜனவரியில் 3.0 சதவீதமாக இருந்த இலங்கையின் பணவீக்கம் 2021 டிசம்பரில் 12.1 சதவீதமாக இருந்தது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இலங்கையில் பணவீக்கம் 14.2 சதவீதமாக கடுமையாக உயர்ந்துள்ளது.


இதனால் ஆசியாவிலேயே அதிக பணவீக்கம் உள்ள நாடாக இலங்கை தற்போது மாறியுள்ளது. இலங்கை உணவுத் துறையில் வருடாந்த பணவீக்கம் 2021 டிசம்பரில் 22.1 சதவீதத்திலிருந்து 2022 ஜனவரியில் 25 சதவீதமாக அதிகரித்துள்ளது


டிசம்பர் 2021 முதல் ஜனவரி 2022 வரையிலான காலகட்டத்தில் உணவு அல்லாத வகையின் ஆண்டு பணவீக்கம் 7.5 சதவீதத்தில் இருந்து 9.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.


இலங்கை மத்திய வங்கி மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் ஆகியவற்றின் படி, 2022 மார்ச் மாதத்திற்குள் இலங்கையின் பணவீக்கம் 16.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.


ஆசிய நாடுகளில், இலங்கையின் பணவீக்கம் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், சிங்கப்பூர், சீனா மற்றும் பிற நாடுகளை விட அதிகமாக இருந்தது.


No comments