இஸ்ரேலில் பரவும் டெல்டா வைரஸ். தடுப்பூசி போட்டவர்களுக்கும் பாதிப்பு
: 'கடந்த சில நாட்களாக இஸ்ரேலில் தடுப்பூசி போடப்பட்ட மக்களுக்கும் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கு டெல்டா வைரஸ் தான் காரணம் 'என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட டெல்டா கோவிட் வைரஸ் அதிகமாக பரவும் தன்மை கொண்டது. வைரஸால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர். 'டெல்டா வைரஸ் இதுவரை 85 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பரவும் தன்மை தொடர்ந்தால் உலகம் "கடுமையாக பாதிக்கப்படலாம்" என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இஸ்ரேலில் 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்; 6,000க்கும் மேற்பட்டோர் பலியாகினர். தொற்று பாதிப்பு கடந்த மாதத்தில் வெகுவாகக் குறைந்து இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கோவிட் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் டெல்டா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோவிட் பரவலுக்கு இங்கு புதிதாகப் பரவி வரும், டெல்டா வைரசே காரணம்' என, மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், தொடர்ந்து பரிசோதனைகளை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments