சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாதவர்களிடம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம்!
வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இலங்கையில் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதவர்களுக்கு நடைமுறையில் இருந்த 5,000 ரூபாய் அபராதம் 50,000 ரூபாயாக உயர்த்தப்படுவது, கொரோனாவைஒகொரோனாவை இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.
களுத்துறை நாகொட வைத்தியசாலை ஆய்வுகூட திறப்பு விழாவில் உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதவர்கள் மீது சுகாதார அமைச்சு மற்றும் காவல்துறை க
இணைந்து சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கொவிட் தொற்றை ஒழித்து, நாட்டை பாதுகாப்பதற்கான இயலுமை எமக்கு உள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் அலைகளை கட்டுப்படுத்த இயலுமானதாக இருந்தால், மூன்றாவது அலையையும் கட்டுப்படுத்துவது கடினமான காரியம் அல்லவென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த இலக்கை அடைவதற்காகவே அனைத்துவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக தற்போதுள்ள சட்டங்களை கடுமையாக அமுல்படுத்துவதற்கான தேவைப்பாட்டையும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
No comments