Breaking News

எமது ஊரில் இருந்து பாதுகாப்பு படையில் இணைந்துகொள்ள இருக்கும் முதல் இளைஞன்!





பாஹீம் முஹம்மத் முஜாஹித்! 


பண்ணவ பெரிய பள்ளிவாயல் முன்னால் தலைவர் ஜனாப் AA பாஹீம் அவர்களின் இரண்டாவது புதல்வன்! 


பண்ணவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் சாதாரண தரம் வரை பயின்று பின்பு குளியாபிட்டிய தொழில்நுட்ப கல்லூரியில் Electrical துறையில் கற்கை நெறியை நிறைவு செய்துவிட்டு தற்போது பாதுகாப்பு படையின் பொறியியல் படையணிக்கு (Engineering force) தெரிவு செய்யப்பட்டு பயிற்சிகளுக்காக சென்றிருக்கிறார்..


19 வயதே ஆகும் முஜாஹித் அவர்கள் ஊரின் பொது வேலைகள் எதுவாக இருந்தாலும் முன்னே நிற்கக் கூடிய துடிப்புள்ள ஒரு இளைஞன், 


ஜனாசாக்களை அடக்கம் செய்யும் கப்ர் குழி வெட்டுவதாக இருந்தாலும் சரி, குர்பானியுடைய வேலைகளாக இருந்தாலும் சரி, நிவாரணம் வழங்கக் கூடிய வேலைகளாக இருந்தாலும் சரி, எங்குமே முன்னால் இருப்பார்.


கஷ்டப்படுவோருக்கு உதவி ஒத்தாசைகளை தயங்காமல் வழங்கும் குணம் இவரை சாரும், சகோதர இனத்தவர்களின் அன்பைப் பெற்றவர்..


தற்காலத்தில் இடை நடுவில் படிப்பை விட்டுவிட்டு போதைப்பொருளுக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்து நிற்கும் இளைஞர்கள் மத்தியில் இவர் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு!


எமது சமூகத்தில் இருந்து இதுபோன்ற தொழில்களுக்கு அதிகம் அதிகம் செல்ல வேண்டும்! அதற்கான ஊக்கங்களை எமது இளைஞர்களுக்கு வழங்க வேண்டும்! 


(இவரது பயிற்சி முகாமில் நாற்பது சகோதர இன இளைஞர்களுக்கு நம்மவர்கள் 6 பேர் இருப்பதாக அறிய முடிந்தது, உண்மையில் இது ஆரோக்கியமான ஒரு அடைவுதான்!) 


🔹சிறந்த முறையில் பயிற்சிகளை முடித்து தனது பொறுப்பில் இருந்து நாட்டிற்கும் சமூகத்திற்கும் சிறந்த நற்பணி ஆற்ற மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!

No comments