Breaking News

தாய்மை




பெண்மையின் உன்னதமான நிலை தாய்மையாகும். 

♥️ஆணைவிடக்கூடுதல் அன்பு, இரக்கம், பொறுமை, பெண்மையில் காணப்படுவது அதன் சிறப்பம்சமாகும். உலகில் தாய் செலுத்தும் அன்புக்கு ஈடாக எதுவும் அமைய முடியாது.  யாராலும் இவ்வளவு இரக்கத்துடனும் அன்புடனும் இருக்க முடியாது என்ற உண்மையை இன்று உலகமே ஏற்றுக்கொண்டுள்ளது. அந்தளவு தாய்மை மிகவும் மகத்தான ஒன்றாகும். 


♥️ஒரு உயிருக்கு முழு அன்பையும் வாழ்க்கை முழுவதும் கொடுக்கும் ஒரு ஜீவன் என்றால் அது தாய் மட்டும் தான் அந்த பாசம் விலைமதிக்க முடியாதது.


♥️தாய்மை என்ற வார்த்தைக்குள் எண்ணிலடங்காத, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வலிகள், கஷ்டங்கள், அர்ப்பணிப்புக்கள் ஏராளம். 


♥️பத்து மாதம் வயிற்றில் சுமப்பது, பெற்றெடுப்பது இந்த வலிகளை கற்பனையில் கூட நினைத்துப்பார்க்க இயலாது. இதனாலேயே இவ்வளவு மகிமையை இறைவன் தாய்மைக்கு கொடுத்திருக்கிறான். 


♥️அது மாத்திரமா! இரவு பகல் பாராமல் பாலூட்டுவது, தூங்காமல் விழித்திருப்பது, பிள்ளையை வளர்க்க எவ்வளவு கஷ்டம் ஆனால் சற்று முகம் சுழிக்காமல் அன்போடு அரவணைக்கும் உள்ளம் பெற்றவள் அது தாய் மாத்திரமேயாகும்.


♥️இவ்வாறு கட்டம் கட்டமாக எங்களை வளர்த்து ஆளாக்கிய தாய்மையை உதாசீனம் செய்பவர்கள் எம்மில் எத்தனை பேர்... நானும் தான் நீங்களும் தான் இந்த விடயத்தில் அதிக பொடுபோக்குத்தனமாக இருக்கிறோம். எனவே எமது தாய் எமக்காக பட்ட தியாகங்களுக்கு பெரிய கைமாறு எல்லாம் செய்யத் தேவையில்லை  அவர்களுக்காக கையேந்தி துஆ கேற்கும் ஸாலிஹான பிள்ளைகளாகவும், அன்பாக நடந்து தாயின் திருப்தியை பெறக்கூடியவர்களாக திகழ்வோம். அதுவே நாம் தாய்மைக்கு கொடுக்கும் கண்ணியமாகும். 


பெண்மையை போற்றுவோம்

தாய்மையை மதிப்போம்..


Faslan Hashim✍️

No comments