Breaking News

இசை

 🎵 🎼 🎶



         

உணர்வுகளை மாசுபடுத்தும் இசையை உன் நண்பனாக்கிக் கொள்ளாதே ! ... 🤝❌

அதை வெறுத்துப் பகைவனாக்கிடு உன் மரணம் வரை ! ...  😡😠


உன் செவிகளில் ஈயம் காய்ச்சி ஊற்றப்படுவதற்கு , நீயே காரணமாகி விடாதே ! ... 


ஒரு சிறு எறும்பின் கடியைக் கூட உன்னால் தாங்க முடியாதல்லவா  ?... 🐜

கொதிக்கும் ஈயக் கரைசலை  எப்படி தாங்கிக் கொள்வாய் !  ... 🔥


இப் பூவுலகமும் அழியும் காலமும் நெருங்கி விட்டதடா ! 🌍

இதில் உன் வாழ் நாள் எவ்வளவு என்பதை ஒருபோதும் நீ அறிய மாட்டாயடா ! ... 😟


நேரத்தை வீணடித்து , டிக் டாக் பார்ப்பதும் பதிவிடுவதும் தான் உனது வேலையா ? ... 📱📲 

உன் வாழ் நாள் குறைந்து செல்வது உனக்கு தெரியவில்லையா ?...😟


அடுத்து வரும் பாடல் என்ன என்று எதிர்பாராதே !

அடுத்த வினாடி உன் நிலை என்ன என்று என்னிப்பார் ! ... 🤔


உன் வாழ்க்கையை இசையோடு கலந்து நாசமாக்கி விடாதே ! ... 🎶

உன் இறுதி முடிவு மோசமாகி விடும் ! ... 😭


ஈன்றெடுத்த தாயும் ஏரெடுத்து பார்க்க மாட்டாளடா ! 🤱

சுயநலமே அந்  நாளில் அனைவருக்கும்  சொந்தமடா !..


கரும்பு தின்னக் கைக் கூலி வேண்டுமா ?...

இனியவனே !  இசையைக் கேட்காதே ! 🎼

இறை வசனங்கள் ஓதக் கேள் ! ...


இசை தான் உன் செவிகளுக்கு இனியது என்றால், 👂

இறை வசனங்களையும் சற்று செவி தாழ்திக் கேட்டுப்பார் ! ... 

அதில் உணரும் இன்பம் வேறெதிலும் இல்லையடா ! ...


உள்ளங்களை ❤️ ஈர்க்கும் வண்ணம் பாடல்களை எழுதுவதும்  இசையமைப்பதும் பெருமை என்றால், 

இறைவன் தடுத்ததை வெறுத்து ஒதுக்கி பொறுமை காத்து வாழ்வது, அனைத்திலும் திறமை !... 👍


இனியவனே !...

 

ஆபாசங்களை பார்ப்பதை விட்டும் உன் விழிகள் விரைவில் உறங்கி விடட்டும் ! 👀

இறைவன் தடுத்ததை செய்வதை  விட்டும் உன் கரங்கள் உன் பின்னே ஒழிந்து கொள்ளட்டும் ! ...✋🤚


தீயதை பேசுவதை விட்டும் உன் நாவு ஊமையாகட்டும் ! 😶


இனியவனே ! என்றும் என் அன்பிற்கு உறியவனே ! ❤️

நலவுகளை கூறுவதில் மாத்திரம்  உன் குரல் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும் ! 🗣️

தகாதவைகளை கேட்பதை விட்டும் உன் செவிகள் தூர விலகிச் செல்லட்டும் ! 👂

உன் வாழ்க்கை ஓர் இலட்சியத்தை நோக்கிய பயணமாகும் ... 👣

அதை அலட்சியம் செய்து விடாதே ! ...

உன் வாழ் நாளை மண் குதிரை போல் மாற்றி , ஆற்றில் விட்டு விடாதே !

அதை படகாக மாற்றிடு , விரைவில் கரை சேருவாய் ! ...🛶


No comments