Breaking News

பயணத் தடை 21 ஆம் திகதி வரை நீடிப்பு


தற்போது அமுலிலுள்ள பயணத் தடை, எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதற்கமைய, எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 04 மணியுடன்  பயணத் தடை நீக்கப்படும்  என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலே தற்போது 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பயணத் தடை நீடிக்கப்பட்டாலும் ஆடை கைத்தொழில், நிர்மாணப்பணிகள், அத்தியாவசிய சேவைகள் என்பன வழமைபோன்று முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார மத்திய நிலையங்களும் அறிவிக்கப்பட்டுள்ள திகதிகளில் திறக்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்தார்.

விவசாய நடவடிக்கைகள், சேதனப்பசளை உற்பத்தி ஆகியனவும் வழமைபோன்று முன்னெடுக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments