Breaking News

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

 


அயர்லாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை (16.04.2023) காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.


◾இலவச வாய்ப்பு

நாளை போட்டியை காண விளையாட்டு ரசிகர்களுக்கு இலவச வாய்ப்பு வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.


அயர்லாந்து இலங்கைக்கு எதிராக காலியில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை விளையாடுகிறது, முதல் ஒரு போட்டி நாளையும் (16.04.2023) இரண்டாவது போட்டி ஏப்ரல் 24 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அணித் தலைவர் திமுத் கருணாரத்ன, நாங்கள் காலிக்கு வரும்போது, ​​எங்கள் வீட்டைப் போல உணர்கிறோம் என்று தெரிவித்துள்ளார். 

No comments