Breaking News

அரசாங்கத்தின் அதிரடி திட்டம்: அழகிய நகரமாக மாறும் நுவரெலியா!

 


இலங்கையில் 4 ஆண்டிற்குள் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கான பிரதான சுற்றுலா நகரமாக காணப்படும் நுவரெலியாவின் அதிகபட்ச பங்களிப்பினை பெற்றுக்கொள்ளவதற்கான திட்டமிடலுடன் வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

நுவரெலியா மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இன்றைய தினம் (10-04-2023) குறித்த நகர அபிவிருத்தி தொடர்பில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் பங்குபற்றலுடன் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் நுவரெலியா புதிய நகர அபிவிருத்தி திட்டம் மற்றும் நுவரெலியா சுற்றுலா திட்டம் என்பனவும் வெளியிடப்பட்டன.



இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்று பலர் நினைத்தாலும் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தம் வாயிலாக நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற புதிய எதிர்பார்ப்புக்கள் தோன்றியுள்ளது என ஜனாதிபதி ரணில் இதன்போது சுட்டிக்காட்டினார்.


நுவரெலியாவை நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் கொள்ளுவதற்கான கண்கவர் நகரமாக அதனை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் நோக்கத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.


No comments