திலினி பிரியமாலி மோசடி செய்த மொத்த பணத் தொகை! கோடிக்கணக்கான பணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
பாரியளவில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலி மோசடி செய்த பணத்தொகை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி தொடர்பில் இதுவரை 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
🔶கோடிக்கணக்கான பண மோசடி.......
இந்த முறைப்பாடுகளுக்கு அமைய 128 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை அவர் மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.
திலினி பிரியமாலிக்கு எதிராக மொத்தமாக 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
No comments