Breaking News

பொது மக்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை

 


சுற்றுலா விசாக்கள் மூலம் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளுக்கு அனுப்பும் மோசடியாளர்கள், ஆள் கடத்தல் காரர்களிடம் யாரும் சிக்கி கொள்ள வேண்டாம் என பொது மக்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும்போது வேலை மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு முக்கியமானது. எனவே அவர்கள் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துவிட்டு வெளிநாடு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சட்ட விரோதமான முறையில் சுற்றுலா விசா மூலம் தொழில் செய்ய செல்ல வேண்டாம் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்து உள்ளார்.

No comments