2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டி; முதல் பதக்கத்தை சுவீகரித்தது இலங்கை!
2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில், 55 கிலோ கிராம் நிறைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இலங்கையின் திலங்க இசுரு குமார வெண்கலம் வென்றுள்ளார்.
2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பேர்மிங்ஹாம் நகரில் இடம்பெற்றுவருகின்றது.
இது இலங்கையின் முதல் பதக்கம் என்பதுடன், 225 கிலோ கிராம் பளுதூக்குதல் போட்டியிலேயே திலங்க இசுரு குமார வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அதேவேளை பொதுநலவாய விளையாட்டு விழா பேர்மிங்கத்தில் எதிர்வரும் ஜூலை 28ம் திகதி முதல் ஆகஸ்ட் 8ம் திகதிவரை நடைபெறவுள்ளது.
No comments