மேலும் 40 கொரோனா மரணங்கள் பதிவு
மேலும் 40 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்த 40 மரணங்களும் நேற்று (07) பதிவு செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளதென அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வௌியிட்டுள்ளது.
29 ஆண்களும் 11 பெண்களுமே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
அதற்கமைய, நாட்டில் இதுவரை 3,391 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இன்று இதுவரை 842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாட்டில் இதுவரை 2,69,518 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
No comments