Breaking News

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து; வட மாகாண ஆளுநரின் அதிரடி நடவடிக்கை!



ஒவ்வொரு நாளும் தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் A-9 பாதையில் சோதனையிடப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.


வவுனியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த விபத்து விடயம் தொடர்பில் நான் பொலிஸ்தரப்பு மற்றும் ஏனைய தரப்புகளிடம் விசாரணை அறிக்கையினை கேட்டுள்ளேன்.


எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் அத்தோடு தேசிய போக்குவரத்து ஆணை குழுவின் தலைவரோடு ஒரு உரையாடலை மேற்கொண்டு சில முடிவுகளை எடுத்திருக்கின்றோம்.


அதாவது யாழ்- கொழும்பு மற்றும் ஏனைய தூர இடங்களுக்கு சேவையில் ஈடுபடும் பேருந்துகள் அனைத்தையும் வடக்கு மாகாணத்திற்குள் ஒரு இடத்தில் ஒவ்வொரு நாளும் வழித்தட அனுமதியினை பரிசோதிப்பது அத்தோடு A-9 பாதையில் ஏதோ ஒரு இடத்தில் பயணம் செய்யும் பேருந்துகளை 10 நிமிடங்கள் நிறுத்தி சாரதிகளை சோர்வு தன்மையில் இருந்து நீக்குவதற்கு ஒரு முயற்சியினை எடுத்துள்ளோம்.



அத்தோடு ஒவ்வொரு மாத கடைசியிலும் தூர சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளின் தரப் பரிசோதனையினை உறுதிப்படுத்தும் பரிசோதனையினையும் மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான பயணத்திற்கான நேர கட்டுப்பாடு ஒன்றிணையும் விதிப்பதற்கு உள்ளோம் எனவே அனைத்து விடயங்களும் தேசிய போக்குவரத்து ஆணை குழுவின் தலைவருடன் உரையாடி முடிவு எட்டப்பட்டுள்ளது.


இந்த விடயங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் வடக்கில் பேருந்துகளால் ஏற்படும் விபத்துகளை குறைக்க முடியும் என தெரிவித்தார். 

No comments