தென்னிலங்கையில் படகு சவாரி சென்ற மூன்று யுவதிகள் மாயம்
தென்னிலங்கையில் படகு சவாரி சென்று மூன்று யுவதிகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.
சூரியவெவ, மஹாவெலிக்கட பகுதியில் படகில் சவாரி சென்ற போதே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
சவாரியின் போது படகு கவிழ்ந்தில் அதில் மொத்தம் 8 பேர் இருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
8 மாத கைக்குழந்தை உட்பட 5 பேர் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்ட பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி சம்பவத்தில் குருநாகல் பகுதியை சேர்ந்த 18, 17 மற்றும் 10 வயதுடைய பதின்ம வயதுடைய யுவதிகளே காணமல் போயுள்ளனர்.
குறித்த மூன்று யுவதிகளை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
No comments