Breaking News

புலமைப்பரிசில், உயர்தரப்பரீட்சைகள் இடம்பெறும் திகதிகளில் மாற்றம்

 


2022ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை இடம்பெறவுள்ள திகதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளது.


அத்துடன், 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

No comments