50 ஆயிரம் ரூபாய்க்காக தந்தை செய்த கொடூர செயல்!
பிறந்து ஏழு நாட்களே ஆன ஆண் குழந்தையை ஐம்பதாயிரம் ரூபாவுக்கு வெளிநாட்டு பெண் ஒருவருக்கு விற்றதாக கூறப்படும் தந்தையை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது குழந்தையை வாங்கியதாக கூறப்படும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் மீட்கப்பட்ட குழந்தையை பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
No comments