கொழும்பில் பதற்றம்! போராட்டக்காரர்களை இரவோடு இரவாக அகற்றும் நடவடிக்கையில் ஆயுதம் ஏந்திய படையினர்
ஜனாதிபதி செயலகத்திற்குள் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பிரிவினர் நூற்றுக்கணக்கானோர் திடீரென நுழைந்துள்ளமையினால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோட்டா கோ கம போராட்டக்காரர்களையும் அங்கிருந்து அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக போராட்டக்காரர்களுக்கும்,இராணுவத்தினருக்கும் இடையில் கடும் மோதல் நிலவியுள்ளதுடன்,போராட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது இராணுவத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள மூன்று போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் மீது இராணுவத்தினர் கொடூரமான முறையில் தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், அவர்களை இராணுவத்தினர் அழைத்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
No comments