அரசுக்கு எதிராக சஜித் அணி பெரும் போராட்டம்
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில், அரசுக்கு எதிராக இன்று பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குருநாகல் கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு உறுப்பினர்கள் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பொருட்களின் விலையேற்றத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் நிவாரணம் வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், விவசாய நடவடிக்கைக்குத் தேவையான உரத்தை வழங்குமாறும் போராட்டத்தில் பங்கேற்றிருந்த விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.
No comments