DATA ROBBERY
Data robbery
🔸இன்றைய நவீன உலகில் technology ஆனது மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது யாவரும் அறிந்ததே.
🔸அதே சமயம் உலகில் உள்ள பாரிய நிறுவனங்கள் பொதுமக்களின் dataகளை அடிப்படையாக கொண்டு இயங்கி வருகிறது. Data என்பதைப் பற்றி தெரியாதவர்களுக்கு புரிந்து கொள்ள எளிதாகக் கூறுகிறேன். நான் இங்கு கூறும் Data என்பது நாம் மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என நினைக்கும் நமது சொந்த விடயங்களாகும். அதாவது நமக்கு விருப்பமான உணவிலிருந்து நாம் எங்கு செல்கிறோம் என்பது தொடர்பான விடயங்கள்.
🔸இதுபோன்ற விடயங்களை திடீரென அன்னிய நபர் ஒருவர் வந்து நம்மிடம் கேட்டால் நாம் சொல்ல மாட்டோம். ஆனால் நமது இந்த Dataகள் நமக்கு தெரியாமல் இன்னொரு நபருக்கு நாமே நம் சம்மதத்துடன் கொடுத்து கொண்டு இருக்கிறோம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
*Dataகள்* *யாருக்கு* *தேவை*?
1.தனது targeted customers களின் விருப்பத்துக்கு ஏற்ப வியாபாரம் செய்யும் corporate companies.
2.google, facebook போன்ற tech giants
3.மற்ற நாடுகளைக் கட்டுப்படுத்த/நாட்டு வளங்களை சூறையாட நினைக்கும் China, America போன்ற நாடுகளுக்கு.
*அவர்களுக்கு* *ஏன்* *நமது* *Dataகள்* *தேவைப்படுகிறது* & *எப்படி* *நம்* *Dataகளை* *பெற்றுகொள்கிறார்கள்*?
1.corporate companies தனது targeted customersற்கு என்னென்ன பொருட்கள், உணவுகள், உடைகள் மற்றும் brandகள் பிடிக்கும் என்பதை தெரிந்துகொண்டு அவற்றை அடிப்படையாக வைத்து தான் உற்பத்தி மற்றும் வியாபாரத்தை மேற்கொள்கின்றனர். இவர்கள் பல வழிகளில் இவற்றை பெற்றுக்கொள்கின்றனர். பிரதானமாக google, facebook, whatsapp, online survey மூலம் பெற்றுக் கொள்கின்றனர்.
2.google, facebook, whatsapp போன்றவை நமது Dataகளை பல millonsற்கு corporate companiesற்கு விற்பனை செய்வதன் மூலமும் நமக்கு விருப்பமானவற்றின் தரவுகளை வைத்து அவ்விருப்பத்துக்கு நிகரான பொருட்களை விற்பனை செய்யும் companyகளிடம் பணத்தைப்பெற்று advertisement போடுவதன்மூலம் இலாபம் ஈட்டுகிறது. இவர்கள் நமது dataகளை பின்வருமாறு பெற்றுக்கொள்கின்றனர்.
>நாம் மற்றவர்களுக்கு அனுப்பும் messages மூலம். (facebook&whatsapp)
(உ+ம்)- நன்பருக்கு 'bro i want to buy a phone' என்று message போட்டால் நீங்கள் அன்றைய நாள் முழுக்க facebook, google மற்றும் பல இடங்களில் phone சம்பந்தப்பட்ட advertisement களை காண்பீர்கள்.
🔸காரணம், நீங்கள் phone ஒன்று கொள்வனவு செய்யப்போகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொண்டு இந்த Dataவை வைத்துக்கொண்டு phone companies இடம் பணத்தைப்பெற்று அவர்களின் advertisement ஐ நமது facebook wall இல் இடுகின்றனர்.
>google search மூலம்
நாம் google இல் search பன்னும் எந்த விடயமாக இருந்தாலும் அந்த விடயம் சம்பந்தப்பட்ட advertisement களை உங்களால் google இல் பல நாட்களுக்கு பார்க்க முடியும்.. இவர்களும் Facebook செய்த அதே வேலையைத்தான் செய்கிறார்கள்.
3. America, China போன்ற நாடுகள் மற்றைய நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைப்பது அனைவரும் அறிந்ததே, இவர்களுக்கு ஒரு நாட்டை கட்டுப்படுத்தி அந்நாட்டு வளங்களை கொள்ளையடிப்பது எளிதான காரியமல்ல..குடிமக்கள் தான் நாட்டின் தூண்கள் ஆகவே தூண்களை தகர்த்தால் தான் நாட்டை சரிக்க முடியும். தூண்களை தகர்க்க வேண்டுமானால் அவற்றின் கணத்தையும் உறுதியையும் அறிந்திருக்க வேண்டும். ஆகவே தான் நமது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து துள்ளியமாக செயல்படுவது அவர்களுக்கு அவசியமாகின்றது. இந்த நாடுகளானது smartphones, apps, google data போன்றவற்றிலிருந்து நமது தரவுகளை பெற்றுக்கொள்கின்றனர்.
⚠️ whatsapp ஐ facebook நிறுவனம் 2014 ஆம் ஆண்டு 19 billion அமெரிக்க டாலர்களுக்கு (அன்றைய இலங்கை மதிப்பு- 247,000 crores அல்லது 2,470,000,000,000 ) வாங்கியது.
🔸இவ்வளவு பணத்தை கொடுத்து வாங்கப்பட்ட whatsapp இதுவரை பயனர்களிடமிருந்து ஒரு பைசா கூட அறவிடவில்லை..அப்படியானால் எப்படி whatsapp ஆனது இலாபத்தை ஈட்டுகிறது? சிந்தியுங்கள்!...
Data robbery ஐ எங்களால் முற்றாக தடுக்க முடியாது இருப்பினும் நம்மால் இயன்றவரை விளகியிருப்போம்.
🔸appsகளை install செய்து use பன்னும்போது கேட்கும் permission களில் அந்த appsக்கு தேவையற்ற permissionகளை கொடுக்காமல் தவிர்த்தல், free data free phone தருவதாக வரும் link களை click பன்னாமலிருத்தல் போன்றவற்றின்மூலம் data robbery இலிருந்து தடுத்துக்கொள்ளலாம்.
🔸data robbery ஐ பற்றி எழுதிக்கொண்டே போகலாம். என்னால் முடிந்தவரை சுருக்கமாக கூறியுள்ளேன்... நன்றி.
𝘍𝘢𝘻𝘢𝘭 𝘣𝘪𝘯 𝘙𝘢𝘻𝘻𝘢𝘬
𝘥𝘪𝘱. 𝘪𝘯 𝘢𝘤𝘤𝘰𝘶𝘯𝘵𝘪𝘯𝘨 & 𝘣𝘶𝘴𝘪𝘯𝘦𝘴𝘴 𝘧𝘪𝘯𝘢𝘯𝘤𝘦.
𝘥𝘪𝘱. 𝘪𝘯 𝘦𝘯𝘨.
𝘊𝘈(𝘳𝘦𝘢𝘥𝘪𝘯𝘨).
No comments